அமெரிக்காவிலும் மனித உரிமை மீறல் பிரச்சினைகள் உள்ளன: இந்தியா பதிலடி

Date:

அமெரிக்காவிலும் மனிதஉரிமை மீறல் பிரச்சினைகள் உள்ளன என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை வாஷிங்டனில் சந்தித்து பேசிய பிறகு இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலையளிப்பதாக அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்துவருவது குறித்தும், ரஷ்யாவிடம் இருந்து எஸ்.400 ரக ஏவுகணைகளை வாங்கும் விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அரசு அவ்வப்போது கூறி வருகிறது.

இந்த சூழலில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று முன்தினம் கூறியதாவது:

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பின்போது மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அரசியல், ராணுவ ரீதியாக மட்டுமே ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தியா குறித்து வெவ்வேறு கருத்துகள் இருப்பது இயல்பானது. அதேநேரம் நமக்கும் கருத்துகளை கூற உரிமை உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குறித்து நாமும் கருத்துகளை தெரிவிக்க முடியும். அமெரிக்காவிலும் மனித உரிமை மீறல் பிரச்சினைகள் உள்ளன. அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உதாரணமாக கூற முடியும் என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்