முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் ஜனாதிபதியின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தை பாராளுமன்றம் இரத்து செய்தால் மிகவும் நல்லது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அந்த பாக்கியம் யாருக்கும் கிடைக்காது என்பதால் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் அவர் கூறினார்.
தமக்கு வசிப்பதற்கு அரசாங்கம் வீடொன்றை வழங்கியுள்ளதாகவும் அது விசாலமான வீடு இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.




