ரணில் தலைமையேற்றால் ஒரு மாதத்தில் நாட்டு நிலைமை சீராகும்!

Date:

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தலைமை தாங்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு மாதத்திற்குள் வரிசைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அபேவர்தன, அரசியலமைப்பை திருத்தவோ அல்லது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தவோ நாட்டிற்கு தேவையில்லை எனவும், மக்கள் சார்பாக செயற்படக்கூடிய தனிநபரே தேவை எனவும் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாடு இருந்த நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என அபேவர்தன கூறினார்.

ஐந்து தடவைகள் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் தற்போதைய நிலைமையை மாற்ற முடியும் என்று கூறிய அவர், ஒரு மாதத்திற்குள் வரிசை முறையை இல்லாதொழிப்பார் என்பதில் 1000% உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்