மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

Date:

நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகமாகி 1980களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் மோகன். இவரது கிளிஞ்சல்கள் படம் 250 நாட்களுக்கு மேல் ஓடியது. பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம், விதி, இளமை காலங்கள், மவுனராகம், உயிரே உனக்காக, கோபுரங்கள் சாய்வதில்லை உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

2008இல் சுட்டப்பழம் என்ற படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வந்துள்ளார். இந்த படத்திற்கு ‘ஹரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் விஜய் ஶ்ரீ இயக்குகிறார்.

இந்த படத்தில் மோகன் ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கிறார். ஹரா படத்தை கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

மெக்கா மீதான ஹூதிகளின் ட்ரோன் தாக்குதல் முயற்சிக்கு பரவலான எதிர்ப்பு

மெக்காவை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சியை சவூதி...

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்