கண்டியில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற இ.போ.சபை பேரூந்து பாதையை விட்டு விலகி விபத்து: மயிரிழையில் தப்பிய பயணிகள்

Date:

கண்டியில் இருந்து மன்னார் நோக்கு சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று செட்டிகுளம் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

கண்டியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் மழைக்கு மத்தியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பேரூந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

எனினும், குறித்த பேரூந்தில் 40 இற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த போதும் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என...

மீண்டும் பொருளாதார நெருக்கடியா? திட்டமிட்ட சதி குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை!

2028ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களின்...

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்