சசிகுமாருக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்!

Date:

நடிகை ரம்யா நம்பீசன் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சசிகுமார் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘அஞ்சல’ படத்தின் தங்கம் பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம். இப்படத்தில் 2 நடிகைகள் கதாநாயகிகளாக நடிக்கின்றனராம்.

அதில் ஒருவர் தெலுங்கு நடிகை அனன்யா நாகல்லா. தற்போது மற்றொரு கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் கருணாஸ், விக்னேஷ், பாகுபலி பிரபாகர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் இப்படத்தை எஸ்கேஎல்எஸ் கேலக்ஸி மால் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இ.மோகன் தயாரிக்கிறார்.

ட்ராவல் கதைக்களத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னையில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மலைப் பகுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்