25.4 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இலங்கை

பொதுமக்கள்- இராணுவம் மோதலை உருவாக்க அரசு முயல்கிறது: ஓய்வுபெற்ற இராணுவ உயரதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு!

தற்போது நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை பாதுகாப்பு படையினருக்கும் மக்களுக்கும் இடையிலான மோதலாக உருவாக்க அரசாங்கம் சதி செய்து வருவதாக தேசிய The National Woke Council குற்றம் சாட்டியுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அதன் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் திலக் உபயவர்தன இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஆட்சியில் தொடர முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அரசாங்க உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ வைபவமொன்றில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் நாடு இருப்பதாக உபயவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்துடன் இணைந்து போராட்டம் நடத்துவதற்கு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த அரசாங்கம் தனது கையாட்களைப் பயன்படுத்துகிறது என்றார்.

மிரிஹானவில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கருத்து தெரிவித்த உபயவர்தன, அந்த நபர் பஸ்ஸுக்கு தீ வைப்பதை அனைத்து சட்ட அமலாக்க அதிகாரிகளும் தடுக்கத் தவறியதோடு வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தனர் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் குறித்த விவாதம்

east tamil

அனுர அரசு இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும்

Pagetamil

ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள் இல்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

புதிய வருடத்தில் ஆரம்பமாகிய “க்ளீன் ஶ்ரீலங்கா”

east tamil

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விநியோகம்

east tamil

Leave a Comment