வவுனியாவில் விபத்து: கனடா வாசியும், சாரதியும் படுகாயம்!

Date:

வவுனியா ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே இன்று (02) காலை 9.30 மணியளவில் ஹயஸ் ரக வான் – முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கனடா நாட்டு பிரஜை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே ஓர் வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட போது வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து எதிர்த்திசையில் வவுனியா நகரிலிருந்து நொச்சிமோட்டை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதி இரு வாகனங்களும் விபத்துக்குள்ளாகி, தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சகக்கரவண்டி சாரதியான 43 வயதுடைய குடும்பஸ்தர் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த கனடா நாட்டு பிரஜையான 55 வயதுடைய நபர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக முச்சக்கரவண்டி சாரதி திடீர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் ஹயஸ் ரக வாகனத்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

‘இன்ஸ்டா’ ஜோடி கைவரிசை: 15 கிலோ நகைகள் மீட்பு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை...

எம்.கே.சிவாஜிலிங்கம் காலமானார்

மூத்த அரசியல் போராளியும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான...

தாய்ப்பாசத்தில் நாமலை அடித்துக்கொள்ள ஆளே கிடையாதாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்