Pagetamil
முக்கியச் செய்திகள்

பெரும்பான்மையை இழக்கும் அபாயம்: முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது?

நாடாளுமன்றத்தில் அரச தரப்பு பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்படும் சாத்தியமுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவோ அல்லது இடைநிறுத்தவோ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தரப்பை மேற்கோளிட்டு சிங்களஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புத்தாண்டு விடுமுறையை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கலாம் என்று பல உயர் அரசாங்க அதிகாரிகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை (113) அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த வாரம் கொழும்பில் மூன்று இடங்களில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அரசாங்க புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் பிரதான அரசியல் குழுக்களுடன் விமல்- கம்மன்பில அணி ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

சபாநாயகரிடம் எழுத்து மூலம் பெரும்பான்மையை காட்டி, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு விமல்- கம்மன்பில அணி எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமல்- கம்மன்பில அணியின் கலந்துரையாடல்களை ஆராய்வதற்காக பல புலனாய்வுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அதிகாரிகள் இரவு பகலாக அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரச புலனாய்வு சேவை மற்றும் மேல் மாகாணம் (உளவுத்துறை) ஆகிய புலனாய்வு குழுக்கள் இது தொடர்பில் செயற்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அர்ச்சுனாவுடன் குடும்பம் நடத்திய யுவதி எங்கே?

Pagetamil

உள்ளூராட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு: சங்கு, மான் அணிகள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Pagetamil

தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கும் பிரேரணை சபாநாயகரிடம்: 115 ஜேவிபி எம்.பிக்கள் கையொப்பம்; எதிர்க்கட்சியும் ஆதரவு!

Pagetamil

உள்நாட்டு போரில் மனித உரிமை மீறல்: 4 பேரை தடைசெய்தது பிரித்தானியா!

Pagetamil

வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது!

Pagetamil

Leave a Comment