ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிய உக்ரைனிய இராணுவ ஹெலிகாப்டர்கள், கிழக்கு நகரமான பெல்கோரோடில் உள்ள எரிபொருள் கிடங்கில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது உறுதிசெய்யப்பட்டால், ரஷ்யா படையெடுத்த பின்னர், ரஷ்யாவிற்குள் உக்ரைன் நடத்தும் முதல் விமானத் தாக்குதல் இதுவாகும்.
இன்று வெள்ளிக்கிழமை இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தாக்குதலின் வீடியோ காட்சிகளில், பல ஏவுகணைகள் குறைந்த உயரத்தில் இருந்து ஏவப்பட்டதைக் காட்டியது, அதைத் தொடர்ந்து ஒரு வெடிப்பு மற்றும் பெரிய தீ ஏற்பட்டது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைனின் எல்லையில் இருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள பெல்கோரோடில் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல், அமைதிப் பேச்சுக்களை தொடர வசதியான சூழ்நிலையை உருவாக்கவில்லை என்றார்.
முன்னதாக, பிராந்திய ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் டெலிகிராமில், ஹெலிகொப்டர்கள் குறைந்த உயரத்தில் ரஷ்யாவைக் கடந்த பிறகு சேமிப்பு களஞ்சியத்தை தாக்கியதாகக் கூறினார்.
З’явилося відео вибуху на нафтобазі у російському Білгороді. На кадрах із камери спостереження спочатку видно кілька спалахів, після чого відбувається вибух.
Відео російського пропагандистського видання РБК pic.twitter.com/HdyMdMvXdV— Українська правда ✌️ (@ukrpravda_news) April 1, 2022
“இரண்டு உக்ரைனிய இராணுவ ஹெலிகொப்டர்கள் குறைந்த உயரத்தில் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த வான்வழித் தாக்குதலால் பெட்ரோல் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது” என்று அவர் குறிப்பிட்டார்.
நகரின் சில பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் தீ விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
எவ்வாறாயினும், எரிபொருள் கிடங்கின் உரிமையாளரான ரஷ்ய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நேப்ட் வெளியிட்ட அறிக்கையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
பெல்கொரோட் பிராந்தியத்தில் உள்ள சில கிராமங்கள் மீது உக்ரேனிய குண்டுகள் வீழ்ந்த சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்தன, ஆனால் எண்ணெய் ஆலையை குறிவைப்பது இதுவே முதல் முறை என்று ரஷ்யா கூறுகிறது.
“எண்ணெய் நிலையத்தில் தீ இன்னும் எரிகிறது மற்றும் ரஷ்ய அவசரசேவை அமைச்சகம் தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் சுமார் 60 சிறப்புப் பிரிவுகளைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருவதாக அறிவித்தது.”
எரிசக்தி அமைச்சர் நிகோலாய் ஷுல்கினோவ், இந்த சம்பவம் பிராந்தியத்தின் எரிபொருள் விநியோகம் அல்லது நுகர்வோருக்கான விலைகளை பாதிக்காது என்று கூறினார்.
அண்டை மாநிலமான குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் ரோமன் ஸ்டாரோவோயிட், பிராந்தியத்தின் எரிபொருள் விநியோகம் பல வாரங்களுக்கு போதுமானதாக இருப்பதாகவும், எரிபொருளை சேமிக்க வேண்டாம் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.




