ஓட்டமாவடி பிரதேசசபை உறுப்பினரின் எதிர்ப்பு நடவடிக்கை!

Date:

மட்டக்களப்பு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து .யோகேஸ்வரன் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய சபை அமர்விற்கு துவிச்சக்கர வண்டியில் வந்து தமது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டமொன்றை மேற்கொண்டார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் வாகநேரி வட்டாரத்திற்கான பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர் பிரதேசத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருபவராவார்.

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பொருட்களை பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை, அத்தியாவசியப் பொருட்க்களின் விலையேற்றம் ஆகியவற்றினால் மக்கள் துயரங்களை எதிர்கொண்டுள்ளனர். நாடு அனைத்து துறைகளிலும் வங்குரோத்து நிலையினை அடைந்து விட்டது.என தெரிவித்து இவ் அரசிற்கு எதிராக தமது எதிர்ப்பினை தெரிவித்தார்.

இதனையடுத்து ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற மாதாந்த சபை அமர்விலும் கலந்து கொண்டு நாட்டில் பொது மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகள் குறித்து பிரேரணைகளை முன்வைத்தார்.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்