25.8 C
Jaffna
January 5, 2025
Pagetamil
சினிமா முக்கியச் செய்திகள்

சிறந்த நடிகர் வில் ஸ்மித்; நடிகை ஜெஸ்சிகா: ஒஸ்கார் விருது பட்டியல்!

‘Dune’ திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஒஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

94வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் கொரோனா காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது.

சிறந்த படத்திற்கான விருதை “கோடா” நடிகர்கள் மற்றும் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

அதுபோலவே ஒஸ்கார் விருது கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒஸ்கார் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை ஜப்பானில் இருந்து “டிரைவ் மை கார்” படத்திற்காக ரியுசுகே ஹமாகுச்சி பெற்றுக்கொண்டார்.

CODA என்ற திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. இது பிரெஞ்ச் படத்தின் ரீமேக் ஆகும்.

சிறந்த இயக்குனர் அனே கேம்பியன்

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதன்முறையாக ஓஸ்கார் விருதை வென்றுள்ளார். கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது.

The Eyes of Tammy Faye என்ற திரைப்படத்தில் நடித்த ஜெஸ்சிகா கேஸ்டைன் (Jessica Chastain) சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகை ஜெஸ்சிகா கேஸ்டைன்

டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான Dune திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஒஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஓஸ்கார் விருது Encanto திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

சிறந்த நடிகர் வில் ஸ்மித்

சிறந்த துணை நடிகருக்கான விருதினை ‛டிராய் கோட்சர்’ பெற்றார். சிறந்த துணை நடிகை விருதினை ‛அரியானா டிபோஸ்’ வென்றார்.

சிறந்த பாடலுக்கானா விருதை ஜேம்ஸ் பாண்ட் நடித்த No Time To Die க்கு கிடைத்துள்ளது.

King Richard திரைப்படத்தில் நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது.

The Power of the Dog படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனராக ஜேம் கேம்பியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பானிய திரைப்படமான “டிரைவ் மை கார்” சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

Leave a Comment