ஐபிஎல் போட்டியின் 3வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரோயல் சலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகள் சார்பிலும் தலா ஒவ்வொரு இலங்கை வீரர்கள் ஆடினார்கள்.
முதலில் ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் விளாசியது. பஞ்சாப் 19 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து ‘விரட்டி அடித்தது’.
நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பெங்களூரில் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 88 ரன்கள் விளாசினாா். உடன் வந்த அனுஜ் ராவத் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் விராட் கோலி 41 (29 பந்து), தினேஷ் காா்த்திக் 32 (14 பந்து)ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
பஞ்சாப் பந்துவீச்சில் அா்ஷ்தீப் சிங், ராகுல் சாஹா் ஆகியோா் தலா 1 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
பின்னா் பஞ்சாப் ஆட்டத்தில் ஷிகா் தவன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 (29 பந்து), பானுக ராஜபக்ச 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 43 ரன்கள் (22 பந்து), சோ்த்தனா். கப்டன் மயங்க் அகா்வால் 32, லியாம் லிவிங்ஸ்டன் 19 ரன்கள் அடிக்க, ராஜ் பாவா டக் அவுட்டானாா்.
பெங்களூா் பந்துவீச்சில் முகமது சிராஜ் 59 ஓட்டங்களிற்கு 2 விக்கெட், ஆகாஷ் தீப் 38 ஓட்டங்களிற்கு 1 விக்கெட், வனிந்து ஹசரங்க 40 ஓட்டங்களிற்கு 1 விக்கெட் எடுத்தனா்.