உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள நை மண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் கணவனை மரத்தில் கட்டி வைத்து விட்டு, மனைவியை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட தம்பதியின் புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களை கைது செய்தனர். 2 சிறுவர்கள் உள்பட 10 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய் மாலை மங்கிய சமயத்தில், 24 வயது கணவனும், 21 வயது மனைவியும் பெண்ணின் தாய்வழி வீட்டிலிருந்து கணவனின் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நெடுஞ்சாலையில் உள்ள போபா பைபாஸ் மேம்பாலம் அருகே இருவரும் வந்தபோது, பின்னால் 4 பைக்குகளில் வந்த 8 இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களுடன் இரண்டு சிறார்களும் இருந்தனர். இதையடுத்து, இருவரையும் வலுக்கட்டாயமாக பிடித்து, நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் கணவரை மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்னர், நால்வர் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அந்த குழுவில் வந்த ஏனையவர்கள், சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.
அந்த கும்பல் ஆசையை தீர்த்து விட்டு அங்கிருந்து சென்ற பின்னர், அந்தப் பெண் தனது கணவரின் கைகளையும் கால்களையும் அவிழ்த்து விட்டுள்ளார்.
இருவரும் வீட்டை அடைந்த பின்னர், அச்சம் காரணமாக பொலிசாரிடம் முறையிடவில்லை.
எனினும், குடும்பத்தினரின் ஆலோசனையின்படி மறுநாள் காலையில் பொலிசாரிடம் முறையிட்டனர்.