2020 ஆம் ஆண்டு, ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்திற்கு வெளியே ஈரானிய இராணுவத் தளபதி சுலைமானியை கொன்ற அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இணைய டேட்டிங் தளத்தில் அறிமுகமாக அமெரிக்க இளைஞனை உடலுறவிற்கு அழைத்து கத்தியால் குத்திய ஈரானிய யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மார்ச் 5ஆம் திகதி இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
ப்ளென்டி ஆஃப் ஃபிஷ் என்ற டேட்டிங் தளத்தில் சந்தித்த ஒரு நபரை படுக்கையில் கத்தியால் குத்துவதற்காக மட்டுமே கவர்ந்தார் என்று லாஸ் வேகாஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 5 ஆம் திகதி, நிகோபின் மற்றும் அவரது டேட்டிங் துணை, சன்செட் ஸ்டேஷன் ஹோட்டலில் ஒன்றாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்தனர். அங்கு 21 வயதான நிகோபின் மற்றும் துணை, விளக்குகளை அணைத்துவிட்டு உடலுறவு கொள்ளத் தொடங்கினர்.
உடலுறவின் போது, நிகோபின் தன் காதலனைக் கண்ணை மூடிக் கொள்ளும்படி கூறியுள்ளார். ஒரு துணியால் அவரது கண்களை கட்டியுள்ளார். பின்னர், நிகோபின் தனது பணப்பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அவனுடைய கழுத்தில் இரண்டு முறை குத்தினார்.
உல்லாசத்தில் ஈடுபட்டவர், கழுத்தில் வலியை உணர்ந்து, நடந்ததை ஊகித்தார். உடனே நிகோபினை தள்ளிவிட்டு, அறையை விட்டு வெளியே வந்து 911க்கு அழைத்தார்.
நிகோபினும் அறையை விட்டு வெளியே ஓடி வந்து ஹோட்டல் ஊழியரிடம் தான் ஒரு மனிதனைக் கத்தியால் குத்தியதாகக் கூறினார்.
பொலிசார் நிகோபினை கைது செய்தனர்.
கிரேவ் டிகர் என்ற பாடலை கேட்டு, பழிவாங்க வேண்டுமென்ற உந்துதலை பெற்றதாக தெரிவித்தார்.
தனது டேட்டிங் துணையை ஏன் பழிவாங்க தீர்மானித்தார் என்பது பற்றிய மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
ஈரானிய ஜெனரல் சுலைமானி 2020 இல் பாக்தாத் விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோன் அவரது தொடரணி மீது ஏவுகணைகளை வீசியதில் கொல்லப்பட்டார்.
சுலைமானி இஸ்லாமிய புரட்சிகர காவலர்களின் ஈரானின் குட்ஸ் படையின் தலைவராக இருந்தார், மேலும் மத்திய கிழக்கில் ஷியா ஆயுதக்குழுக்களை உருவாக்கி, அமெரிக்காவிற்கு பெரும் தலையிடியாக இருந்தார்.
ஈரானின் உச்ச தலைவருக்குப் பிறகு நாட்டின் மிக சக்திவாய்ந்த நபராக அவர் அடிக்கடி விவரிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் இந்த தாக்குதல் நடவடிக்கை போர்க்குற்றம் என பல நாடுகள் கண்டித்தன. ஐ.நாவும் கண்டித்தது. அவர் நேரடி அச்சுறுத்தல் எதுவும் அமெரிக்காவிற்கு விடுக்கவில்லையென்றும், அவரை கொன்றது சட்டவிரோதம் என்றும் குறிப்பிட்டது.
ஆனால், அமெரிக்கா அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அதேவேளை, தற்போது உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்துவது போர்க்குற்றம் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது.