27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

பேஸ்புக் தொடர்பு: 16 வயது சிறுவனை கடத்திய தம்பதியினர் கைது!

தனியார் கல்வி நிறுவனத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது சிறுவனை கடத்திய புகாரில், தம்பதியினர் கைதாகியுள்ளனர்.

வெயாங்கொடையில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம்தொடர்பில் தம்பதியினரை பேலியகொடை பொலிஸார் நேற்று (26) கைது செய்துள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுவன், கொழும்பு, மாகொல வடக்கைச் சேர்ந்த யுவதி ஒருவருடன் முகநூல் ஊடாக தொடர்பில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பின்னர் முகநூலில் இருவரும் பலவித குறிப்புக்கள் இட்டதாகவும், யுவதியை அவமதிக்கும் விதமாக சிறுவன் பதிவிட்டதையடுத்தே கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் தனது கையடக்க தொலைபேசியை விற்பனை செய்ய இணையத்தளமொன்றில் விளம்பரம் செய்திருந்தார். அந்த இலக்கத்தை கண்டறிந்து, சிறுவனுடன் தம்பதியினர் தொடர்பேற்படுத்தி, கையடக்க தொலைபேசியை வாங்குபவர்கள் போல பல முறை பேசியுள்ளனர்.

சிறுவன் வெயாங்கொடையில் உள்ள டியூஷன் வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, கையடக்க தொலைபேசியை வாங்கப் போவதாக குறிப்பிட்ட தம்பதியினர் தெரிவித்து, சிறுவனை நகரின் மையப் பகுதிக்கு அழைத்து, காரில்  கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரதி அமைச்சருக்கு மீனவர்கள் எதிர்ப்பு

Pagetamil

யாழில் அதிக போதையால் இளைஞன் உயிரிழப்பு

east tamil

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் கைது

east tamil

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க சட்டத்தரணிகள் குழு அமைப்பு

east tamil

பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன காலமானார்

east tamil

Leave a Comment