அமைச்சர் பதவியில் இருந்து விமல் வீரவன்ச நீக்கப்பட்டதன் பின்னர் அவர் ஒருமுறை கூட பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர் நாடாளுமன்றத்தில் குழுக் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்.
விமல் வீரவன்ச கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் அண்மையில் பல பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றினர்.
அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஆளும் கட்சியில் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவருக்கும் பின்வரிசை நாடாளுமன்ற ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1