சோறை தவிர்த்து சிற்றுண்டிகளிற்கு மாறும் இலங்கையர்கள்; பரோட்டா, வடை விலை உயர்வு!

Date:

பரோட்டா மற்றும் வடை ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது அதிகளவில் சிற்றுண்டி உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் தற்போது ரூ.900, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.950-1,000, முட்டை விலை ரூ.33, பருப்பு கிலோ ரூ.400, சீனி ரூ.200 ஆக தற்போது விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.

சிற்றுண்டி உணவுகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலைகள் 500% அதிகரித்து உற்பத்தி செலவை அதிகரிக்கச் செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதனால் சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றார்.

கோழி இறைச்சி, சோறு பொதி ஒன்றின் விலை ரூ.300 ஆகவும், மீன் ரூ.240 ஆகவும், முட்டை ரூ.220 ஆகவும், மரக்கறி ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது என்றார்.

சோறு பொதி விலை உயர்வால் பொதுமக்கள் 50 முதல் 150 ரூபாய்க்கு பரோட்டா மற்றும் வடை போன்ற மலிவான மாற்றுகளுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று சம்பத் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

தாய்ப்பாசத்தில் நாமலை அடித்துக்கொள்ள ஆளே கிடையாதாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி...

பல மாதங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி அடர்ந்த காட்டு குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

சுமார் ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவரை,...

ரஷ்யாவிற்கு பிராந்தியங்களை விட்டுக்கொடுப்பதற்கு ஈடாக உக்ரைன் நேட்டோவில் சேரும் வாய்ப்பு: அமெரிக்கா புதிய முன்மொழிவு!

நவம்பர் 13 அன்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், டான்பாஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்