டீசல் இல்லாததால் யாழ் மாநகரசபையின் நிலைமை!

Date:

டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் அரைமணித்தியாலயம் ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை சபை மண்டபத்தில் மாநகர முதர்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது யாழ் மாநகர சபையின் 27 வட்டாரங்களில் சிறிய வீதிகளில் விளக்குகள் ஒளிரசெய்தல் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

இது தொடர்பான கருத்துக்களை மாநகர சபை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதில் திடீரென மின்சாரம் இல்லாமல் போனது.

மாநாகரசபையின் ஜெனரேட்டரை இயங்கி மின்சாரம் வழங்குதவற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் சபை அமர்வு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்