பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக் கோரி தேசிய மக்கள் சக்தி இன்று (23) பெரும் கண்டன பேரணியை நடத்தியது.
தெல்கந்த சந்தியில் இருந்து நுகேகொட வரை இந்த போரணி சென்று, ஆனந்த சமரக்கோன் அரங்கில் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த பேரணியில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டதால், ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
74 ஆண்டுகால சாபத்திற்கு முடிவுகட்டுவோம், அடக்குமுறை அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி நடந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1