மகப்பேறு மருத்துவர் வைத்தியர் சாபி சஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலப்பகுதியில் வழங்க வேண்டிய அனைத்து சம்பளம் மற்றும் இடைக்கால கொடுப்பனவுகளை வழங்க பொது நிர்வாக அமைச்சின் நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன ஆஜராகியிருந்தார்.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சந்தன கெடங்கமுவவினால் தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை செல்லுபடியாக்குமாறு கோரி மகப்பேறு மருத்துவர் வைத்தியர் சாபி சஹாப்தீன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவில் குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சந்தன கண்டங்கமுவ மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.