சிறையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க கொழும்பில் நேற்று இரவு நடைபெற்ற SLIM People’s Awards 2022 இல் மக்கள் நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
ரஞ்சன் பலமுறை மக்கள் நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.. ஆனால் இந்த முறை 14 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ரஞ்சன் விருதை வென்றுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கவை, ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சி மற்றும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை பதிலளிக்கவில்லை.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் (UNHRC) ஐக்கிய மக்கள் சக்தி இந்த விடயத்தை எழுப்பியது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1