மஹிந்தவுக்கு யாழில் அடுத்தடுத்து ஏமாற்றம்: நல்லூரும் பிசுபிசுத்தது!

Date:

பிரதமர் மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டை இரத்து செய்து 9.30 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் சென்று வழிபட்டுள்ளார்.

நல்லூரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது என வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நல்லூர் ஆலய விஜயத்தை முன்னிட்டு ஆலயச் சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளும் மூடப்பட்டு காணப்பட்டது.

ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி கோவில் வீதி என்பன பொலிசாரினால் வழிமறிக்கப்பட்டு மாற்றுப்பாதை ஊடாக பொதுமக்கள் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தன் ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக போலீஸ் மற்றும் இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நல்லூருக்காண விஜயம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்பு தரப்பினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்