கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் தொற்று உறுதியானது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு ‘தல யாத்திரை’ பாணி விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழிலுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகள் மேற்கொள்கிறார்.
பிரதமரின் முதல் நிகழ்வாக நயினாதீவு நாகவிகாரையில் வழிபாடு இடம்பெற்றது.
பிரதமரின் நிகழ்விற்கு சென்றவர்கள் அனைவரும் அன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதன்போது பரிசோதிக்கப்பட்டார். அவருக்கு தொற்று உறுதியானது.