9 வயது சிறுவனின் ஆணுறுப்பில் மிளகாய்த்தூள் தடவிய பெண்ணுக்கு பிணை!

Date:

திவுலப்பிட்டி கடவல பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் சிறுவன் ஒருவனின் ஆண்குறியில் மிளகாய் பொடி தடவி சித்திரவதை செய்த, பெண் பராமரிப்பாளரை பிணையில் செல்ல மினுவாங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டது.

படுக்கையில் சிறுநீர் கழித்தார் என்ற குற்றச்சாட்டில் 9 வயது சிறுவனின் ஆணுறுப்பில் மிளகாய் தூள் தடவிய, ஒரு பிள்ளையின் தாயான நிலுகா குமாரி என்ற பெண்ணே பிணையில் விடுதலையானார்.

சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைய பிணை வழங்குவதாக தெரிவித்த நீதவான், சந்தேகநபருக்கு இவ்வாறான கொடூரமான செயல்களைச் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

சந்தேகநபர் சிறுவனை குளியலறைக்கு அழைத்துச் சென்று அவரது கால்சட்டையை கீழே இறக்கி ஒரு கோப்பையில் மிளகாய்த்தூளை கரைத்து சிறுவனின் ஆணுறுப்பில் தடவியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்டுள்ளார்.

நாவல பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியொன்றின் நன்கொடையில் இந்த சிறுவர் இல்லம் நடத்தப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த சிறுவர் இல்லத்தில் 09 சிறுவர்கள் உள்ளதாகவும், பெற்றோரின் சம்மதத்துடன் 14 சிறுவர் சிறுமிகள் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்