மக்கள் வரிசையில்; ஆளுந்தரப்பு அரசியல்வாதியின் பின்னணியில் உல்லாச வாகனச் சவாரி!

Date:

கொழும்பு – புத்தளம் வீதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – வாகன பேரணியின் பின்னணியில் தாம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

கொழும்பு, குளியாப்பிட்டியில் இருந்து கல்பிட்டிக்கு இந்த வாகன சவாரி மேற்கொள்ளப்பட்டது.

இந்த சவாரியில் அதிக எஞ்சின் திறன் கொண்ட 300க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏராளமான சொகுசு ஜீப்புகள் கலந்து கொண்டன.

புத்தளம் தளுவ சந்தியில் ஒன்று கூடிய மக்கள் இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மிகொடுவத்த சுமித தேரரும் இந்த எதிர்ப்பில் கலந்து கொண்டார்.

நாட்டு மக்கள் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் திண்டாடி வரும் போது, இப்படியான பொறுப்பற்ற நடவடிக்கைகளிற்கு அனுமதியளித்த அரசாங்கத்தின் பலமான உறுப்பினர் யார் என கேள்வியெழுப்பினர்.

அத்துடன், கருப்பு கொடிகாட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் சவாரிக்கு முன்பாக போலீஸ் மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பு அளித்தன. அத்துடன், வீதி ஒழுங்கை மேற்கொண்டு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.

“இந்த நாட்டிலுள்ள மக்கள் டீசல், பெற்றோல் வாங்குவதற்காக நீண்ட நாட்களாக வரிசையில் நின்கிறார்கள். அரசியல்வாதிகளின் நலனுக்காக மோட்டார் சைக்கிள் ஓட்டி வருகின்றனர். மோட்டார் சைக்கிள்கள் மட்டுமின்றி, அதில் செல்லும் சொகுசு வாகனங்களுக்கு எரிபொருளை செலுத்த தனி எரிபொருள் பவுசர் அனுப்பப்படும்.

இந்த எரிபொருள் பிரச்சினையிலும் ஏனைய பிரச்சினைகளிலும் மக்கள் தவிக்கும் போது இவ்வாறான வீண் வேலைகள் தவறு என்பதை இந்த அமைச்சர்களால் புரிந்து கொள்ள முடியாதா?” என மக்கள் கேள்வியெழுப்பினர்.

எனினும், மக்களின் எதிர்ப்பின் மத்தியில் பொலிஸ் பாதுகாப்புடன் வாகன சவாரி அந்த இடத்தை கடந்து சென்றது.

இதேவேளை, இந்த பேரணியின் பின்னணியில் தாம் இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார்.

“அமைச்சரால் எந்த உதவியும் செய்யப்படவில்லை. கல்பிட்டியில் நடைபெற்ற சைக்கிளோட்டப் போட்டிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அல்லது இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு. விளையாட்டு அமைச்சுடன் தொடர்பில்லாத ஒரு தனியார் நிறுவனத்தால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ”என்று விளையாட்டு அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரு தொண்டு நன்கொடையின் ஒரு பகுதியாக இந்த பேரணியை ஏற்பாடு செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்