ஆண்ட்ரியாவின் ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள ‘கா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பன்முக திறமைககளை கொண்டு செயல்பட்டு வருபவர் ஆண்ட்ரியா. பாடகியாக அறிமுகமாக இவர், நடிகையாக வலம் வருகிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஆண்ட்ரியாவின் ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கா’.
ஷாலோம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை நாஞ்சில் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து சலீம் கவுஸ், கமலேஷ், அக்ஷிதா, நவீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காட்டுக்குள் சென்று பறவைகள், முழுக்க முழுக்க காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் விலங்குகளை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1