ஊர் பற்றி எரிகையில் ஊர் கோலம் போனாராம் இளவரசர்: சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு; நாமல் விளக்கம்!

Date:

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியதையடுத்து சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளிற்காக பல்வேறு வரிசைகளில் இரவிரவாக காத்திருக்கும் நிலைமையில், அமைச்சர் ஒருவர் உல்லாசமாக பொழுது போக்கிக் கொண்டிருப்பதா என சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்கள் வௌியிடப்பட்டு வருகிறது.

நாமல் ராஜபக்ச, மாலத்தீவில் பல்வேறு நீர் விளையாட்டுக்களில் ஈடுபட்டதுடன், மாலைதீவு ஜனாதிபதியும் கலந்து கொண்ட விளையாட்டு விருது வழங்கும் விழாவிலும் கலந்து கொண்டார்.

சமூக ஊடகங்களில் பரவலாக முன்வைக்கப்படும் விமர்சனம் குறித்து நாமல் ராஜபக்சவிடம் கொழும்பு ஊடகங்கள் வினவிய போது, ஒருநாள் பயணமாக தற்போது மாலைதீவு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 “மாலைதீவு விளையாட்டு அமைச்சர் நடத்தும் மாலைதீவு தேசிய விளையாட்டு விருதுகளுக்காக ஒரு நாள் மாலைதீவில் இருக்கிறேன். மாலைதீவு இலங்கையின் நெருங்கிய நண்பன் என்பதாலும், விளையாட்டு மற்றும் இளைஞர்களில் எங்களுக்கு நல்ல புரிதல் இருப்பதாலும், கடந்த ஒன்றரை வருடங்களில் பல பரிமாற்றங்கள் நடந்துள்ளதாலும், எதிர்காலத்தில் இன்னும் பல பரிமாற்றங்கள் நடைபெறவுள்ளதாலும் இந்த விஜயம் முக்கியமானது.

இந்த பயணத்தால் இலங்கை அரசுக்கு எந்த செலவும் ஏற்படவில்லை.

மறைந்து கொண்டு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது. நாமும் மக்களிடம் சென்று இலங்கையின் பாதுகாப்பான சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். இதில் மாலைதீவுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. மாலைதீவில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு இளைஞர்களுக்கு மாலத்தீவுகள் நிறைய வாய்ப்புகளை வழங்குகின்றன.

நெருக்கடியிலிருந்து வெளிவர இலங்கைக்கு உலக நாடுகள் கைகொடுக்க வேண்டும். எங்களால் ஒரு ஷெல்லுக்குள் ஒளிந்துகொண்டு புகார் செய்ய முடியாது. அதற்கான தீர்வுகளை நாம் தேட வேண்டும். மக்களின் விரக்தியை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்” என மாலைதீவுகளில் இருந்து நாமல் கூறியுள்ளார்.

 

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்