அவுஸ்திரேலியாவின் பேர்த் பகுதியில் காருக்குள் தீ வைத்து உயிரிழந்த தமிழ் குடும்பம் பற்றிய மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கள்கிழமை காலை 11.45 மணியளவில் பெர்த்தின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஜான் கிரஹாம் ரிசர்வ் பகுதிக்கு ஹோண்டா ஜாஸ் காரில் தீ வைக்கப்பட்டது.
தீ அணைக்கப்பட்ட பிறகு, பொலிசார் 40 வயதுடைய தாய், அவரது 10 வயது மகள், 8 வயது மகனின் சடலங்களை மீட்டனர். இது கொலை, தற்கொலை சம்பவம், வெளியிலிருந்து யாரும் சம்பந்தப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.
தகவலறிந்து நாடு திரும்பியவர் நேற்றிரவு விமான நிலைத்தை வந்தடைந்தார். அவரிடம் 2 மணித்தியாலங்கள் பொலிசார் வாக்குமூலம் பெற்றனர்.
அவர் இந்த சம்பவத்தால் நிலைகுலைந்துள்ளதாக அவர்களது தேவாலய பாஸ்டர் ஆபிரஹாம் தவமணி தெரிவித்துள்ளார்.
செல்வன் கோவிந்தன் வைரவன், மனைவி செல்வம்மா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். 8 வயது ஐடன் செல்வன் மற்றும் அவரது சகோதரி 10 வயது அபியா ஆகியோர் பிராவிடன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் கற்கிறார்கள்.
இன்று சக மாணவர்கள் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.
செல்வன் கோவிந்தன் வைரவன், மனைவி செல்வம்மா தம்பதி பியோனா ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரிந்தனர். தந்தை ஒரு முன்னணி மயக்க மருந்து நிபுணர் மற்றும் தாய் ஒரு செவிலியர்.
இந்த சம்பவம் பற்றி பொலிசார் புலன் விசாரணைகளை தொடர்ந்து வருகிறார்கள்.