இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை வெளியிடுமாறு ஜே.வி.பி அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை காரணம் காட்டி இலங்கையில் எரிபொருள் விநியோக பொறிமுறையை இந்தியாவிடம் ஒப்படைக்க தற்போதைய நிர்வாகம் முயற்சித்து வருவதாகக் கூறினார்.




