புகையிரத கட்டணத்தை அதிகரிப்பதற்கான இலங்கை புகையிரத பொது முகாமையாளரின் யோசனைக்கு இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நிலவும் நிர்வாக பலவீனம் காரணமாக இலங்கை புகையிரத திணைக்களம் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், நாடு சிரமங்களை எதிர்நோக்கும் நேரத்தில் இந்த விலை திருத்தத்தை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் வழக்கத்திற்கு மாறான கூடுதல் நேர கொடுப்பனவுகளை வழங்குதல், குத்தகைக்கு சொத்தை வழங்குவதில் கடுமையான நடைமுறையை பின்பற்றாமை மற்றும் குத்தகை பெற அதற்கான திட்டத்தை வகுக்காதது போன்ற பின்னடைவுகளை சரிசெய்வதற்கு பதிலாக பயணிகளுக்கு மேலும் சுமையை ஏற்படுத்துவதை நாங்கள் ஏற்கவில்லை என சங்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
புகையிரத கட்டணங்களை திருத்துவதற்கு இலங்கை புகையிரத பொது முகாமையாளரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு போக்குவரத்து அமைச்சர் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.