24.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil
மலையகம்

நாடு திரும்பியவர் வீடு திரும்பாததன் மர்மம் என்ன?

பதுளை, மாணிக்கவள்ளி தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கணேசன் கலைச்செல்வன் (42) காணாமல் போயிருப்பதாக அவரது மனைவி பொன்மணி, பதுளைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (15) முறைப்பாடு செய்துள்ளார்.

கணேசன் கலைச் செல்வன், கட்டார் நாட்டில் தொழில் செய்து வந்தவராவார். அந் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நபர் பல மாதங்களாகியும், இதுவரை வீடு வரவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பணியகமும், கணேசன் கலைச்செல்வன் இலங்கைக்கு பல மாதங்களுக்கு முன்பே திரும்பிவிட்டதாகவும், அவர் இலங்கையில் எங்கு இருக்கின்றார் என்பது தமக்கு தெரியாதென்றும் கூறியதாக, அவரது மனைவி குறிப்பிடுகிறார்.

இப்படத்தில் காணப்படும் கணேசன் கலைச்செல்வனை அறிந்தவர்கள், கண்டவர்கள் எவருமிருப்பின், அவரது மனைவியான டி. பொன்மலர் என்பவருடன் 0753425661 என்ற கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகிழுந்து-பேருந்து விபத்து

east tamil

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து

Pagetamil

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

east tamil

விபத்தில் இரு மாணவர்கள் பலி

east tamil

4 வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த தாய்

Pagetamil

Leave a Comment