26.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இந்தியா

த காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்க அரசு ஊழியர்களிற்கு அரை நாள் விடுமுறை அறிவித்தது அசாம் அரசு!

த காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்க அரசு ஊழியர்களுக்கு அரைநாள் விடுப்பு அளித்துள்ளது அசாம் அரசு.

காஷ்மீரில் 1990களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படம் வெள்ளிக்கிழமை வெளியாகியது.

இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.காஷ்மீர் பண்டிட்களின் துயரத்தை கூறும் இப்படத்திற்கு வரி விலக்கு வேண்டி பாஜகவினரால் பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. இப்படத்துக்கு பாஜக ஆளும் ஹரியாணா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தைக் காண அரசு ஊழியர்களுக்கு அரைநாள் விடுப்பு அளித்துள்ளது அசாம் அரசு.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, “அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் விடுப்பை எடுத்துக் கொண்டு த காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தைப் பார்த்துவரலாம். அடுத்தநாள் டிக்கெட்டை உயரதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தப் படத்தை முதல்வரும் அவரது அமைச்சரவை சகாக்களும் குவஹாத்தி திரையரங்கில் பார்த்து ரசித்தனர்.

பிரதமர் மோடி இப்படம் குறித்து, “த காஷ்மீர் ஃபைல்ஸ் நல்ல படம். நீங்கள் அனைவரும் அதைப் பார்க்க வேண்டும். இதுபோன்ற திரைப்படங்கள் அதிகம் வர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

Leave a Comment