நாளையும் (16) மின்வெட்டு தொடரும்.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய பகுதிகளில் 3 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டு மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணித்தியாலம் 45 நிமிடம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும், P, Q, R, S, T, U, V, W ஆகிய பகுதிகளில் 4 மணி நேரம் 45 நிமிடம் மின்வெட்டு விதிக்கப்படும். காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூன்று மணிநேரம் மின்வெட்டு மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை ஒரு மணித்தியாலம் 45 நிமிடம் மின்வெட்டு அமல்ப்படுத்தப்படும்.




