மனைவி, மகளுக்கு கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாயை சேர்ந்த ஒருவர் வேலணையிலும் திருமணம் செய்துள்ளார்.
நேற்று, மனைவியின் வீட்டுக்கு சென்றவர், அங்கு ஏற்பட்ட தகராறையடுத்து 8 வயதான மகள் மற்றும் மனைவிக்கு கத்தியால் குத்திவிட்டு, தானும் அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த அயலவர்கள் மூவரையும் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1