சனி, ஞாயிறு மின்வெட்டு விபரம்!

Date:

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய வார இறுதி நாட்களில் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நாளை (12) முற்பகல்10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அந்த வலயங்களில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும், A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அந்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதற்கிடையில், P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு இடையே நாளை மறுதினம் (13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

spot_imgspot_img

More like this
Related

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்