புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கலுக்கான பண்டமெடுக்க புறப்பட்டனர்!

Date:

கிளிநொச்சி, கரைச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் உற்சவம் இன்று (11) பகல் விளக்கு வைத்தல் பூசையுடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி பண்டமெடுத்து வருவதற்காக மாட்டு வண்டிகளில் பக்த்தர்கள் யாழ் புத்தூர் பண்டமரவடிக்கு சென்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக காணப்படுகின்ற புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெற உள்ளது

இந்த நிலையில் இன்றைய தினம் (11) ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி விளக்கு வைத்தல் பூசையுடன் ஆரம்பமாகியது.

இன்று பகல் 12 மணிக்கு ஆலய பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பிரம்பு வழங்கும் வைபவம் இடம்பெற்றதையடுத்து, யாழ் தென்மராட்சி புத்தூர் சந்தியிலுள்ள பண்டமரவடிக்கு சென்று பொங்கலுக்கான பண்டம் எடுத்து வரும் மரபுகளுக்கு அமைய பிற்பகல் மாட்டு வண்டிகளில் தொண்டர்கள் ஆலய முன்றலில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

தொன்று தொட்டு பேணப்படும் மரபுகளுக்கு அமைவாக இவ்வாறு புறப்பட்ட இவர்கள், மீசாலை புத்தூர் சந்தியில் அமைந்துள்ள பண்டமரவடிக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பொங்கலுக்கான பொருட்களை எடுத்து எதிர்வரும் 18ஆம் திகதி ஆலயத்தை வந்தடைந்து அங்கே பொங்கல் வழிபாடுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...

போராட்டத்துக்காக 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் தியாகம் செய்தது மட்டக்களப்பு

மட்டக்களப்பு தமிழ் தேசிய போரட்டத்துக்காக பல இயக்கங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்