தரமற்ற இயற்கை உரங்களை இறக்குமதி செய்வதைத் தவிர்க்குமாறு ஜனநாயகத்திற்கான சிவில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
விவசாயத் திணைக்களம் ஆரம்பத்திலிருந்தே விவசாய சமூகத்தின் அவல நிலையை உரிய அமைச்சர்களிடம் தெரிவித்திருந்தால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது என அவர்கள் கூறுகின்றனர்.
SLS தரத்திற்கு முரணான கரிம உரங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டமைப்பின் அழைப்பாளர் கலாநிதி ஹேரத் எம். ஆரியரத்ன தெரிவித்தார்.
பக்டீரியா கலந்த உரம் இறக்குமதி செய்யப்படுவதைக் பரிசோதித்து கண்டறியும் ஒரு குறிப்பிட்ட சரத்து திருத்தப்பட்டு வருகிறது. இது ஒருவரின் ஆரோக்கியத்திற்கும் அறுவடைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். சீனா உரம் இறக்குமதி செய்வதும் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்துவதாக கூறினார்.
எனவே, இவ்வாறான முயற்சிகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயத் தொழில் அழிந்துள்ள அதேவேளை உணவு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நேற்று மாலை விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வாவை சந்தித்தனர்.
தரமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என பணிப்பாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்.
விவசாயத் தொழிலுக்கு தீங்கு விளைவிக்கும் முடிவுகள் எட்டப்படாது என்று கூறிய அவர், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் சட்டத்தின் கீழ் முடிவுகள் எட்டப்படும் என்றும் கூறினார்.
கலாநிதி டி சில்வா, கரிம உரத்திற்கான தொழில்நுட்பம் வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், விவசாயத் திணைக்களம் இது தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அனைத்து நடவடிக்கைகளும் சுற்றுச்சூழலுக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.