ஐ.நா அமைதிப்படை வர வேண்டும்: யாழில் போராட்டம்!

Date:

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘வர வேண்டும் வர வேண்டும் ஐநா அமைதிப்படை வர வேண்டும்., வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேசமே நாம் அழுவது கேட்கவில்லையா?, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேணடும், தமிழரின் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இடைத்தேர்தல் தோல்விக்கு ஈரான் போரும் காரணமாக அமைந்திருக்கலாம்: ட்ரம்ப்

ஈரானுடனான போர், இடைக்காலத் தேர்தல்களில் தனது குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஒரு...

அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப்பிற்கு அதிர்ச்சி வைத்தியம்; நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினர் ஜனநாயகக் கட்சியினர்

செவ்வாயன்று ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். செனட் மற்றும்...

தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக் கொடுக்க இந்தியா இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்தாக –எம்.பி. இ. சிறிநாத் தெரிவிப்பு

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்