மிதுன ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்.
மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பார்வைக்கு வெகுளி போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் எளிதில் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!!
கிரகநிலை
கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் – சனி பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் – குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் – ராகு பகவான் லாப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.
இந்த பெயர்ச்சியால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் நீங்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் – மனைவிடையே சிறு சிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. பொன்பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். தொழில் வியாபார செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமத்த்ப்படும். சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் லாபங்களுக்கு குறை இருக்காது.
பொருளாதார் நிலை
கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனக்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவு சுமாராக இருக்கும்.
கொடுக்கல்-வாங்கல்
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்துச் செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையே இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடிவந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
உத்தியோகம்
பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறாப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும்,
அரசியல்
மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டியிருக்கும். கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால்தான் முன்னேற முடியும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஓரளவுக்கு ஆதாயப் பலனையே அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும்.
விவசாயிகள்
விளைச்சல் ஓரளவுக்குத்தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடு பட வேண்டிவரும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள். சந்தையிலும் விளைபொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்துச் செல்லவும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளவும் புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றும்.
கலைஞர்கள்
தகுந்த பாத்திரங்களுக்காக காத்திராமல் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. போட்டி, பொறாமைகள் அதிகரிப்பதால் நல்ல வாய்ப்புகள் பறிபோகும். ஆடம்ப்ர வாழ்க்கையிலும் பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.
மாணவ-மாணவியர்
கல்வியில் மந்த நிலை ஏற்படக்கூடிய காலம் என்பதால் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச்செல்லும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெற இயலாமல் போகும்.
உடல் ஆரோக்யம்
உடல் ஆரோக்யம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூறமுடியாது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும். மனைவி, பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். நீண்டநாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்
எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான
பலன் தரும்.
திருவாதிரை
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும், கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்
தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். காரிய தடை நீங்கும். எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பரிகாரம்
முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணையில் தீபம் ஏற்றி 7 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9