ரஷ்யாவில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ரஷ்ய எதிர்ப்பு போராட்டங்களிற்கு அழைப்பு விடுத்தல் மற்றும் “ரஷ்ய ஆயுதப் படைகளின் பயன்பாட்டை இழிவுபடுத்தும்” தகவல்களை பரப்புதல் போன்ற செயல்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றங்களிற்காக 15 வருடம் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ரஷ்யாவில் சில மேற்கு ஊடகங்களிற்கு கட்டுப்பாடு
ரஷ்யாவில் பிபிசி உட்பட பல ஊடக வலைத்தளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக ரஷ்யாவின் ஊடக கண்காணிப்பு அமைப்பு வெள்ளிக்கிழமை கூறியது.
பிபிசியின் இணையத்தளங்கள், மெடுசா என்ற சுயாதீன செய்தி இணையதளம், ஜெர்மன் ஒளிபரப்பாளர் Deutsche Welle, மற்றும் அமெரிக்க நிதியுதவி பெற்ற ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா/ரேடியோ லிபர்ட்டி, ஸ்வோபோடாவின் ரஷ்ய மொழி இணையதளம் ஆகியவற்றுக்கான அணுகல் Roskomnadzor ஆல் “வரம்பிடப்பட்டது” என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை நோக்கி ரஷ்ய துருப்புக்கள் “எல்லா பக்கங்களிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றன” என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
“இது வெடித்தால், அது சோர்னோபிலை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும்!” என்று அவர் ட்விட்டரில் எச்சரித்தார்.
36 ஆண்டுகளுக்கு முன்பு செர்னோபிலில் ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்து, வரலாற்றின் மிக மோசமான அணுசக்தி பேரழிவாக கருதப்படுகிறது. அங்கிருந்து கதிரியக்கத்தன்மை இன்னும் கசிந்து கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு அணுமின் நிலைய விபத்தைப் பற்றி உக்ரைன் எச்சரித்துள்ளது.
“ரஷ்யர்கள் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும், தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க வேண்டும், பாதுகாப்பு மண்டலத்தை நிறுவ வேண்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.
The reactors are located very close to the shelling site. The chance of hitting or ricocheting is very high. pic.twitter.com/H5hchSBZWk
— NEXTA (@nexta_tv) March 4, 2022
இதேவேளை, ரஷ்ய ஷெல் தாக்குதல் காரணமாக ஜபோரிஜியா அணுமின் நிலையம் தீப்பற்றி எரிவதாகவும், தீயணைப்பு வீரர்கள் இன்னும் அணைக்கத் தொடங்கவில்லை என்று அருகிலுள்ள நகரமான எனர்கோடரின் நகர மேயர் மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் கூறியதாக நெக்ஸ்டா செய்தி தெரிவித்துள்ளது.
ஜபோரிஜியா அணுமின் நிலையம், ஐரோப்பாவிலேயே மிகப் பெரியது. ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலுக்குப் பிறகு தீப்பிடித்தது என டிமிட்ரோ ஓர்லோவ் தெரிவித்தார்.
டினிப்ரோ நதியோரத்திலுள்ள ஜபோரிஜியா அணுமின்உற்பத்தி நிலையம், உக்ரைனின் மின்சார தேவையில் நான்கில் ஒரு பகுதியை பூர்த்தி செய்து வருகிறது.
This is what the situation at the #Zaporizhzhia NPP looks like right now pic.twitter.com/1q5qguBMLs
— NEXTA (@nexta_tv) March 3, 2022
“ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் கட்டிடங்கள் மற்றும் அலகுகளின் மீது தொடர்ச்சியான எதிரி ஷெல் தாக்குதலின் விளைவாக, ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையம் தீப்பற்றி எரிகிறது” என்று ஓர்லோவ் கூறினார்.
உக்ரைன் அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது
ருமேனியாவில் மனிதாபிமான மையத்தை அமைக்கும் அதே வேளையில், உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் வரையப்பட்ட ஒரு தற்காலிக பாதுகாப்பு பொறிமுறையை செயல்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸ் கூட்டத்தில் ஒப்புக்கொண்டனர். முன்னாள் யூகோஸ்லாவியாவில் நடந்த போர்களின் போது தயாரிக்கப்பட்ட இந்த செயல்முறை அப்போது பயன்படுத்தப்படவில்லை.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஐரோப்பிய உள்துறை ஆணையர் யில்வா ஜோஹன்சன், இது ஒரு “வரலாற்று முடிவு” என்று ட்வீட் செய்துள்ளார்.
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறியதாவது: உக்ரைனில் போரில் இருந்து தப்பியோடிய அனைவருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிக பாதுகாப்பு அளிக்கும்.
ரஷ்ய வெளிநாட்டினரை ஏற்றிச் சென்ற விமானம் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டது
கனடாவின் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள Yellowknife விமான நிலையத்தில் ரஷ்ய வெளிநாட்டினரை ஏற்றிச் செல்லும் பட்டய விமானம் ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
“உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு நாங்கள் தொடர்ந்து பொறுப்புக் கூறுவோம்” என்று அல்காப்ரா கூறினார்.
A charter aircraft that carried Russian foreign nationals has been held at the Yellowknife airport. We will continue to hold Russia accountable for its invasion of Ukraine.
— Omar Alghabra (@OmarAlghabra) March 3, 2022
புடினைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ஜெலன்ஸ்கி
உக்ரைனுக்கு வலுவான இராணுவ உதவியை வழங்குமாறு மேற்கு நாடுகளை வலியுறுத்தும் அதே வேளையில், தன்னுடன் நேரடிப பேச்சுவார்த்தைக்கு வருமாறு புடினுக்கு, உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டுத் தலைவர்களுடனான தனது சமீபத்திய சந்திப்புகளுக்கு புடின் பயன்படுத்திய நீண்ட மேசையைப் பற்றி கிண்டலான குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, ”பேச்சுவார்த்தைக்கு என்னுடன் உட்காருங்கள், 30 மீட்டரில் அல்ல. நான் கடிக்கவில்லை. நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்?” என தெரிவித்தார்.
ரஷ்ய மற்றும் உக்ரேனிய தரப்புக்களிற்கிடையில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் நம்பிக்கைக்குரியதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் பேச்சுவார்த்தையின் அவசியத்தை வலியுறுத்தினார், “எந்த வார்த்தைகளும் துப்பாக்கிச்சூட்டை விட முக்கியம்” என்று கூறினார்.
தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்ற முயலும் ரஷ்யா
உக்ரேனிய நகரமான எனர்கோடரின் மேயர், ரஷ்ய துருப்புக்களின் தொடரணி,வியாழன் பிற்பகுதியில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான, அருகிலுள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை நோக்கிச் சென்றதாகக் கூறினார்.
தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஆலையைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை ரஷ்ய துருப்புக்கள் முடுக்கிவிட்டதாகவும், டாங்கிகளுடன் எனர்கோடருக்குள் நுழைந்ததாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் ஒரு ஒன்லைன் இடுகையில், “நகரத்தில் உரத்த வெடியோசைகள் கேட்கின்றன’ என குறிப்பிட்டார்.