கணவருக்கு தெரியாமல் 3வது காதலனுடன் உல்லாசம்; 2வது காதலனின் வெறிச் செயல்!

Date:

https://www.theindiaprint.com/up-news-english/geeta-had-gone-out-for-a-car-ride-with-friends-spoiled-her-intentions-on-the-way-and-was-murdered-191870

கள்ளக்காதலனை விட்டுவிட்டு வேறொரு காதலனுடன் கைகோர்க்க நினைத்த இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் ஒரு வார காலத்திற்கு பிறகு உண்மையை வெளிகொணர்ந்த போலீசார் அடுத்தடுத்து குற்றவளிகளை கைது செய்து வருகிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர், ரத்தன்பூர் பகுதியை சேர்ந்தவர் இந்தர்பால். இவர் சிஆர்பிஎஃப் படையில் ஜவானாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா தேவி (34).

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், தேர்தல் பணிகளுக்காக இந்தர்பால் அங்கேயே தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 20ஆம் திகதியன்று, மனைவிக்கு மணிப்பூரில் இருந்துக்கொண்டே போன் செய்துள்ளார் இந்தர்பால். ஆனால் மனைவி கீதா போனை எடுக்காததால், சந்தேகம் அடைந்த இந்தர்பால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

பொலிசார் அந்த வீட்டிற்கு சென்றனர். ஆனால் வீட்டில் கீதா இருக்கவில்லை. வீட்டில் பயிர் ரின்கள், கண்ணாடிகள், மற்றும் சில சந்தேகத்திற்குரிய பொருட்கள் காணப்பட்டன.

இதையடுத்து, 21ஆம் திகதி வீடு திரும்பிய இந்தர்பால், பாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு விசாரணையில் ஈடுபட்ட போலீஸார், மொபைலின் சிடிஆரை சோதனையிட்டபோது, ​​இரண்டு எண்களிற்கு கீதாவின் தொலைபேசியிலிருந்து பலமுறை உரையாடியது தெரிய வந்தது. இதன் அடிப்படையில், கங்காகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சொத்து வியாபாரி புஷ்பேந்திரா மற்றும் கான்பூர் கிராமப்புறத்தில் உள்ள ரூரா ஹஸ்னாபூர் கிராமத்தைச் சேர்ந்த முக்தார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

பொலிசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்தது.

கீதாவின் கள்ளக்காதலன்தான் இந்த முக்தர். இவர் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஒன்றாக பாடசாலையில் படித்தவர்கள். திருமணத்தின் முன்னரே இருவருக்கும் தொடர்பிருந்தது. திருமணத்தின் பின்னரும் கீதாவின் கள்ளக்காதல் தொடர்ந்தது. இருவரும் தினமும் மணித்தியாலக்கணக்கில் தொலைபேசியில் பேசிக் கொண்டனர்.

திடீரென கீதா இன்னொரு நபருடன் பழகி வந்திருக்கிறார். இந்த விஷயம் தெரிந்த முக்தர், கீதாவை கண்டித்துள்ளார். ஆனால், கீதா அதை காதிலேயே வாங்காமல் தொடர்ந்து அந்த புதிய நபருடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முக்தர் கீதாவை கொலை செய்ய திட்டம் தீட்டி மாஸ்டர் பிளானை போட்டுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று கீதா வீட்டிற்கு சென்ற முக்தரும் இரண்டு நண்பர்களும், கீதாவுடன் இருந்து பியர் அருந்தியுள்ளனர். பின்னர், கீதாவை சமாதானம் பேச காரில் அழைத்து சென்ற முக்தர், தனது நண்பர்கள் 2 பேரின் உதவியோடு, காரிலேயே கீதாவின் கழுத்தை நெரித்து கொன்று, அங்குள்ள கழிவு நீர் தொட்டி ஒன்றில் போட்டுவிட்டு சென்றுள்ளார்.

இவ்வளவையும் விசாரணையில் போலீசாரிடம் வாக்குமூலமாக முக்தர் தெரிவித்துள்ளதையடுத்து கைதாகி உள்ளார். மேலும் காரில் கீதாவை கொலை செய்ய உதவிய மற்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தந்தை பணிக்கு சென்ற பின்னர் சொத்து வியாபாரி மற்றும் முக்தார் வீட்டிற்கு வந்து செல்வதாக, கொல்லப்பட்ட கீதாவின் பிள்ளைகள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்