24.7 C
Jaffna
January 7, 2025
Pagetamil
சினிமா

ஏகே-61: அஜித்தின் கதாபாத்திரம் எத்தகையது?: இயக்குநர் ஹெச்.வினோத் தகவல்

‘ஏகே61’ படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹியூமா குரோஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வலிமை’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனால், வசூல் ரீதியாக எப்படி என்பது விரைவில் தெரியவரும்.

இதனிடையே, அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்கவுள்ளார். இதனையும் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.

தற்போது இந்தப் படத்துக்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. மார்ச் 9ஆம் திகதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தில் அஜித்தின் கெட்டப் என்று புகைப்படம் ஒன்றைப் படக்குழு வெளியிட்டது. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இந்தப் படத்தில் நாயகன், வில்லன் இரண்டுமே அஜித் தான் என்று ஹெச்.வினோத் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அஜித்திற்கு இரட்டை வேடமாக என்ற கேள்விக்கு, அது இப்போதைக்குச் சொல்ல முடியாது என்று பதிலளித்துள்ளார் ஹெச்.வினோத்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

Leave a Comment