ஊடகவியலாளர் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் அழகியிடம் விசாரணை!

Date:

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இலங்கை திருமதி அழகுராணி புஷ்பிகா டி சில்வாவிடம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிசார் தெரிவித்தனர்.

அவர் உட்பட 37 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

சமுதிதவின் வீடு தாக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புஷ்பிகா டி சில்வா யூடியூப் சனல் ஒன்றின் ஊடாக சமுதித சமரவிக்கிரமவுக்கு வழங்கிய நேர்காணலில் அடங்கியிருந்த விடயங்களை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

புஷ்பிகா டி சில்வாவுடன் அவரது சட்டத்தரணி சரித் பத்திரத்னவும் பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

இடைத்தேர்தல் தோல்விக்கு ஈரான் போரும் காரணமாக அமைந்திருக்கலாம்: ட்ரம்ப்

ஈரானுடனான போர், இடைக்காலத் தேர்தல்களில் தனது குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஒரு...

அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப்பிற்கு அதிர்ச்சி வைத்தியம்; நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினர் ஜனநாயகக் கட்சியினர்

செவ்வாயன்று ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். செனட் மற்றும்...

தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக் கொடுக்க இந்தியா இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்தாக –எம்.பி. இ. சிறிநாத் தெரிவிப்பு

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்