26.3 C
Jaffna
January 2, 2025
Pagetamil
சினிமா

மனைவிக்கு தெரியாமல் விஜய் பட ஹீரோயினை தனியாக அழைத்த பிரபல நடிகர்!

அட்ஜஸ்ட் பண்ணாததால் தனக்கு பெரிய கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்று இஷா கோபிகர் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் இஷா கோபிகர். விஜய்யின் நெஞ்சினிலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்.

வைத்தியக் குடும்பத்தை சேர்ந்த இஷா, பொக்கட் மணிக்காக மொடலிங் செய்தார். அதன் பிறகு நடிகையாகிவிட்டார்.

திரையுலகம் பற்றி இஷா கூறியிருப்பதாவது,

திரையுலகில் கேம்புகள், நெபடிசம் இருக்கிறது. 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் பெரிய படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் முன்னாள் ஹீரோயின் ஒருவர் சில போன் கோல்கள் செய்ய, அவரின் மகளுக்கு அந்த படம் கிடைத்து விட்டது.

ஹீரோவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் கூறினார். அவர் சொன்னது எனக்கு புரியாமல் ஹீரோவுக்கு போன் செய்தேன். அவரோ தனியாக வந்து என்னை சந்திக்கவும் என்றார். அவர் மனைவிக்கு தெரியாமல் கள்ளத்தொடர்புகள் வைத்திருப்பதாக அப்பொழுது பேச்சிருந்தது.

என் உதவியாளர்கள் இல்லாமல் தனியாக வரச் சொன்னார். உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து, என் திறமைக்காக மட்டுமே வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றேன். உடனே என்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

நான் காம்பிரமைஸ் செய்யாததால் சிறு கதாபாத்திரங்கள் தான் கிடைத்தது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

Leave a Comment