அடுத்த வாரமும் எரிபொருள் விலை அதிகரிக்கும்!

Date:

ரஷ்யா – உக்ரைன் நெருக்கடியின் அடிப்படையில் உள்நாட்டு எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயாராகி வருவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

அடுத்த வாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என தொழிற்சங்கவாதி ஆனந்த பாலித தெரிவித்தார்.

சமீபத்திய விலை அதிகரிப்பு காரணமாக லங்கா ஐஓசி ரூ.1.2 பில்லியன் லாபத்தைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

லங்கா ஐஓசி ஜனவரி 2020 முதல் மார்ச் 2021 வரை வரம்பற்ற லாபத்தை ஈட்டியதுடன், கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் உலகளாவிய எரிபொருள் விலைகள் குறைவடைந்த போது எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக பாலித கூறினார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிகரிக்க விரும்பிய விலையை விட லங்கா IOC எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது பொது மக்கள் மேலும் சுமைக்கு ஆளாக நேரிடும் என்று பாலித கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் நிரந்தர பாலம் 13 அமைக்கும் திட்டத்தின் மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

இந்திய அரசின் மானிய உதவியின் கீழ்  இலங்கையில் புனர்நிர்மானிக்கப்படவுள்ள 13 நிரந்தர...

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்