No bra, no entry: மாணவிகள் உள்ளாடை அணிந்திருக்கிறார்களா என சோதித்த கல்லூரி நிர்வாகம்!

Date:

நைஜீரியாவில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியொன்றில் பெண் மாணவிகள் உள்ளாடை அணிந்துள்ளனரா என வாயிலிலேயே சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசோரோ (Ozoro) மாகாணத்தின், ஓகேவாஷி-உகு (Ogwashi-Uku) நகரில் டெல்டா மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இந்த சம்பவம் நடந்தது.

கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள், ஊழியர்கள் உள்ளாடையை கட்டாயம் அணிந்து வர வேண்டும், கிழிந்த, இடுப்பு தெரியும், பின்பகுதிகள், மார்புப்பகுதிகளை காண்பிக்கும் ஆடைகள், குட்டைப்பாவடைகள் அணியக்கூடாதென்ற உத்தரவு இடப்பட்டதை தொடர்ந்து, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆடைக்கட்டுப்பாட்டு சுவரொட்டிகள் கல்லூரியில் ஒட்டப்பட்ட பின்னர், திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மாணவர்கள்- குறிப்பாக பெண்கள், ஊழியர்கள் சோதனையிடப்பட்டு, கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

அங்கங்களை காண்பிக்கும் ஆடை அணிவது, பெண்கள் உள்ளாடை அணியாமல் ஆடை அணிவதால், கல்லூரிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியதாகவும், எனவே மாணவர்கள் மற்றும் பணியாளர்களில் உள்ளாடைகளை அணியாதவர்களை கண்காணிக்க கல்லூரியின் பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டதாக, கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

முறையற்ற ஆடை அணிந்தவர்கள், உள்ளாடை அணியாதவர்கள் என பல மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, கல்லூரிக்கு வெளியில் நிற்க வைக்கப்பட்டனர்.

இந்த தகவல் கல்லூரிக்குள் பரவி, அமைதியின்மையை ஏற்படுத்தியது.

“கல்லூரிகளில் இதுபோன்ற டிரஸ்ஸிங் டிரெண்டிங் மற்றும் இந்த ஆடைகளின் மூலம் மாணவர்களையும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களையும் திசை திருப்புவதை நான் எதிர்க்கிறேன். இது சரியான ஆடை அல்ல. ஒரு முதிர்ந்த பெண் எப்படி இப்படியான ஆடைகளை அணிய முடியும். சில ஆடைகள் உள்ளாடை இல்லாமல் வெளிப்படையான உள்ளது.அதனால்தான் ஆண்கள் அவர்களை கற்பழிக்கிறார்கள். அவர்கள் விரிவுரையாளர்களையும் மற்றவர்களையும் கூட திசை திருப்புகிறார்கள். அவர்கள் இங்கு படிப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.  அவர்கள் யாஹூ பெண்களின் வகுப்பைச் சேர்ந்தவர்கள்’ என கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இது தங்களின் உரிமைகளை மீறுவதாகும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர.

“உள்ளாடை அணிபவர்களையும் அணியாதவர்களையும் நிர்வாகத்திற்கு எப்படித் தெரியும்? இது எமக்கு அவமானம், நிர்வாகம் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும், ”என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

கல்லூரியின் உதவி இயக்குனர் மன்ஃப்ரெட் ஓயிபோக்பே, இந்த சோதனையை உறுதி செய்து, நியாயப்படுத்தினார்: “இது நோ பிரா நோ என்ட்ரி (no bra no entry) கொள்கை அல்ல. அநாகரீகமான ஆடைகளை உடுத்துவதைத் தடுக்கும் வகையில் மட்டுமே கல்லூரி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. பின்னர், விதிகளை மீறுபவர்களையும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்