புகையிரத கடவை மூடப்பட்ட நிலையிலும் உள்ளே நுழைந்தவர் பலி!

Date:

மாவிட்டபுரத்தில் உள்ள பாதுகாப்பான கடவையில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (26) காலை இந்த விபத்து நேர்ந்தது.

புகையிரதம் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த நிலையில், அறியாமையால் பயணிக்க முற்பட்டவேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன்...

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு  உடந்தையாக...

119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்தில் அழைப்பு: இதுவரை 11,000 பேரிடம் விசாரணை

காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்