இலங்கை

மன்னாரில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இன்று சனிக்கிழமை (26) காலை 9 மணியளவில் மன்னார் பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

பயங்கரவாத தடை சட்டம் என்ற போர்வையில் மனித உரிமைக்கு எதிராக பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக நீக்க கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தின் பகுதியாக இன்றைய தினம் மன்னாரில் பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், மத குருக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு கையெழுத்து போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

நவரசம் எனும் கவிதை நூல் வெளியிட்டமையின் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட அஹானாப்பும் கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

புளியம்பொக்கணை நாகதம்பிரான் பொங்கலில் வெளிமாவட்ட பக்தர்களிற்கு அனுமதியில்லை!

Pagetamil

எம்.கே.சிவாஜிலிங்கம்,து.ரவிகரன் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை யூலை 26 ஆம் திகதி!

Pagetamil

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம்- மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!