திங்கட்கிழமை இந்திய மீனவர்களை முற்படுத்த உத்தரவு!

Date:

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12மீனவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13ம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட தையடுத்து குறித்த 12 இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ் பாலசுப்ரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று (25) பகல் 11 40 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது

இதன் போது எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த இந்திய மீனவர்களை மன்றல் முன்னிலைப்படுத்துமாறும் அன்றைய தினம் குறித்த இரண்டு வழக்குகளுக்கும் குற்றச்சாட்டு பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு கட்டளை இட்டுள்ளது.

நேற்று இந்திய துணை தூதரக அதிகாரிகளும் மண்ணில் சமூகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது –

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹரகம வீட்டில் தீவிபத்து: 3 பேரின் மரணத்தின் காரணம் வெளியானது!

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில்...

கயிறிழுத்தல் போட்டியில் உயிரிழந்த இளைஞன்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் உள்ள மிகஹாவெல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கயிறு...

அணு ஆயுதங்கள் அல்ல, ஈரானின் பலமாக மாறிய புவியியல் அமைவிடம்

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருக்கலாம் — ஆனால், அத்தகைய நீர்வழிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்